23-1-2018 கேரள ஸ்டிரைக்கால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பாதிப்பு
|ஒட்டன்சத்திரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று (ஜன.24) நடைபெறும் வேலை நிறுத்தம் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வரத்து 30 சதவீதமாக குறைந்தது.
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் இங்குள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஏறக்குறைய 70 சதவீத காய்கறிகள் கேரள வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.
முதல் நாள் வாங்கப்படும் காய்கள் அன்றே லாரிகளில் ஏற்றப்பட்டு, மறுநாள் கேரளாவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இதன்காரணமாக கேரளாவில் வேலை நிறுத்தம் நடக்கும் நாளுக்கு முதல்நாள் இங்கு கேரள வியாபாரிகள் காய்கறிகளை வாங்க மாட்டார்கள்.
இன்று கேரளாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம் நடைபெறுவது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள், காய்கறிகளை கொண்டுவரவில்லை. இருந்தாலும் தமிழக வியாபாரம் இருந்ததால் 30 சதவீத காய்கள் மட்டுமே மார்க்கெட்டிற்கு வந்திருந்தது.
Source – http://www.dinamalar.com/district_detail.asp?id=1944702